போடு தாம்பாளம்,போடு புழுக்க,சுடு விளக்கு,கட்டு கயிரு,வெட்டு வெட்டரிவாள்.
ஒரு ஊரில் ஒரு அம்மா அவளுடைய பையனை எழுப்பி அவனிடம் ஒரு ஏழு இட்லி குடுத்து அவனிடம் இதை விற்று வா என்று சொன்னாள்.
அவன் சரி அம்மா என்று சொல்லிவிட்டு போனான்.
அங்கே போனால் ஒரு இட்லி கூட விக்கல.
அவன் ஒரு குளத்துக்கு அடியில் உட்க்காந்து 1 திங்கவா 2 திங்கவா 3 திங்கவா இல்லை அத்தனையும் திங்கவா என்று சொன்னபோது அங்கிருந்த பூதங்கள் தன்னைத்தான் தின்னபோகிறானோ என்று நினைத்து வெளியே வந்துவிட்டது.
அந்த பூதம் அவனை பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது?
அதற்கு`அந்த பைய்யன் நடந்ததையெல்லாம் சொன்னான்.
அப்படியா என்று கேட்டு அந்த பூதம் ஒரு தட்டைக் கொடுத்து போடு தாம்பாழம் என்று சொன்னால் உனக்கு அது சாப்பாடு போடும்.
சரி என்று சொல்லிவிட்டு ஒரு பாட்டியிடம் அந்த தட்டை குடுத்துவிட்டு போடு தாம்பாழம் என்று சொல்லாதே என்று சொல்லிவிட்டு நான் குளித்து வருகிறேன் என்று போய்விட்டான்.
பாட்டி சந்தேகப்பட்டாள்.
கதவை மூடிவிட்டு போடு தாம்பாழம் என்றாள்.
வீடு நிறைய சாப்பாடாக வந்தது.
அந்த பாட்டி அந்த தட்டையை எடுத்து ஒளித்துவிட்டு அதேபோல் வேறொரு தட்டை வைத்து விட்டாள்.
அவன் குளித்துவிட்டு வந்து அந்த தட்டை குடுங்கள் என்று கேட்டான்.
அதற்கு அந்த பாட்டி இந்தா என்று கொடுத்தாள்.
அவன் வீட்டிற்கு போய் அவன் அம்மாவிடம் சொன்னான் நம் கஷ்டம் எல்லாம் முடிந்தது என்றான்.
போடு தாம்பாழம் என்றான்.
அந்த தட்டு எதுவும் போடவில்லை.
மறுனாள் அதே போல் அவன் அம்மா அவனிடம் ஏழு இட்லி கொடுத்து விற்று வர சொன்னாள்.
அவன் குளத்திற்கு போய் 1 திங்கவா 2 திங்கவா 3 திங்கவா இல்லை அத்தனையும் திங்கவா என்றான்.
அந்த பூதம் வெளியே வந்தது.
அவன் சொன்னான் போடு தாம்பாழம் என்று சொன்னேன் ஆனால் அது எதுவும் போடவில்லை. ஏன் என்று கேட்டான்.
சரி என்று ஒரு ஆட்டை கொடுத்தது.
போடு புழுக்க என்று சொன்னால் இது தங்க புழுக்கையாக போடும் என்று சொன்னது.
அவன் அதேபோல் அந்த பாட்டி வீட்டிற்கு போய் இந்தா இந்த ஆட்டை பிடித்துக்கொள் என்று சொன்னான்.
போடு புழுக்க என்று சொல்லாதே என்று சொல்லிவிட்டு போனான்.
அந்த பாட்டி கடவை மூடிவிட்டு போடு புழுக்க என்று சொன்னாள்.
அந்த ஆடு தங்க புழுக்கையாக போட்டது.
அந்த பாட்டி அதேமாதிரி ஒரு ஆட்டை வைத்துவிட்டு அந்த ஆட்டை எடுத்துக்கொண்டாள்.
அவன் குளித்துவிட்டு வந்து அந்த ஆட்டை கேட்டான்.
அந்த பாட்டி ஆட்டை கொடுத்தாள்.
அவன் வீட்டிற்குப் போய் அவன் அம்மாவிடம் நம் கஷ்டமெல்லாம் முடிந்தது என்றான்.
அவன் போடு புழுக்க என்று சொன்னான் ஆனால் அந்த ஆடு சாதாரன புழுக்கையை போட்டுவிட்டது.
அவன் அம்மா உன்னையே வளர்க முடியவில்லை இதில் இந்த ஆட்டை வேற வளர்க வேண்டுமா? என்று அடித்தாள்.
திருப்பியும் அவன் அந்த குளத்திற்கு அருகே சென்று 1 திங்கவா 2 திங்கவா 3 திங்கவா இல்லை அத்தனையும் திங்கவா என்றான்.
அந்த பூதம் வெழியே வந்தது.
அவன் சொன்னான் நான் போடு புழுக்க என்று சொன்னேன் ஆனால் அந்த ஆடு சாதாரன புழுக்கையை போட்டது என்று சொன்னான். அதுவும் உன்னால் நான் என் அம்மாவிடம் நான் அடி வாங்கினேன்.
சரி நான் உனக்கு ஒரு விளக்கு,அறிவாள்,கயிரு தருகிறேன்.
விளக்கு-சுடு விளக்கு
அறிவாள்-வெட்டு வெட்டறிவாள்
கயிரு-கட்டு கயிரு
இது மூண்றையும் சொல்லாதே என்று சொல்லிவிட்டு குளிக்க போய்விட்டான்.
அந்த பாட்டி சுடு விளக்கு,வெட்டு வெட்டறிவாள்,கட்டு கயிரு என்று சொன்னாள்.
அந்த விளக்கு பாட்டியை சுட்டுவிட்டது,அந்த அறிவாள் எல்லா இடத்திலும் வெட்டி விட்டது,அந்த கயிரு கட்டி போட்டுவிட்டது.
அவன் குளித்துவிட்டு வரும்போது அந்த பாட்டி கட்டி போட்ட நிலையில் இருந்தாள்.
நீதான் அந்த திருடியா? என்று கேட்டான்.
கொடு எல்லாத்தையும் என்றான். சரி என்று கொடுத்துவிட்டாள்.
என்னை மன்னித்துவிடு என்று கேட்டாள். சரி என்று மன்த்துனிவிட்டான்.
Good. Please concentrate on spelling mistakes.
ReplyDeleteபிரமாதம், முடிவுப் பகுதி மட்டும் கொஞ்சம் ஃபாஸ்டா இருக்கு. கதை தொடங்கும்போது இருக்கறமாதிரி நிதானமா எழுதினா இன்னும் நல்லா இருக்கும். கீப் இட் அப்.
ReplyDeleteThank you.
ReplyDeleteவெரிகுட். தமிழில் நல்லா எழுத ஆரம்பிச்சிட்ட. பிளாக்கில் போடும் முன்னர் அப்பாவிடம் அல்லது அம்மாவிடம் காண்பித்து எழுத்துப்பிழைகளை சரிசெய்து போடவும், உனக்கும் பயிற்சியாக இருக்கும்.
ReplyDeleteNalla kathai. Aakaash kitta koduthu padikka solkiren.
ReplyDeleteGangaimuthu N
abiram it was really superb i'm shocking now
ReplyDeletekalakkura po
ReplyDeleteevolo china vaiasulla kallakkura
ReplyDeletethank you
ReplyDelete