சிட்டுக் குருவியும் அதன் பேராசையும்.
சிட்டுக் குருவியும் அதன் பேராசையும்.
நான் ஒரு கதையை படித்தேன். அந்த கதையின் பெயர் திட்டம் பலித்தது ஆனால்? ........ இதுதான் இந்த கதையின் பெயர். இது ஒரு நீதிக் கதை. நீதிக் கதை என்றால் { Moral Story }.
அந்த கதையில் ஒரு சிட்டுக் குருவி மத்த பறவைகளை ஏமாத்தி கால் உடைந்து வால் போய் ஏண்டா இப்படி பன்னோம் என்று கேட்பது போல இருக்கிறது. இது தான் கதை.
அதில் ஒரு பய்யன் எல்லா பறவைகளுக்கும் தினமும் சாப்பாடு போடுவான்.அதை பார்த்த அவன் அப்பா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதை பார்த்துவிட்டு அவன் அப்பா அந்த தோட்டத்திலேயே ஒரு கூடாரம் கட்டி கொடுத்தார்.
அதை பார்த்த அந்த பய்யன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான. அவன் மருபடியும் அந்த பறவகளுக்கு போய் சாப்பாடு போட்டான். தினமும் எல்லா பறவைகளும் சாப்பிடும். அதில் ஒரு சிட்டுக் குருவிக்கு ஒரு ஆசை.
அந்த ஆசை என்னவென்றால், எல்லா பறவைகளும் தினமும் ஒன்றாய் தானே போகிறோம். அதனால் இந்த சிட்டுக் குருவிக்கு எல்லாரும் சாப்பிட்ட மிச்சம்தான் கிடைக்கும்.
அதனால் அந்த சிட்டுக் குருவி ஒரு யோசனை செய்தது. மறுநாள் அவைகள் சாப்பிடப் போகும்போது, அந்த சிட்டுக் குருவி அங்கு ஒரு பூனை இருக்கிறது என்று சொல்லி ஏமாத்திவிட்டு அந்த சாப்பாட்டையெல்லாம் சாப்பிட்டுவிட்டு மிச்சம் இருப்பதை அவகளுக்கு கொடுத்தது.
ஒரு நாள் பக்கத்து வீட்டில் ஒரு விருந்து முடிந்தது. அதில் சிந்தியிருக்கும் சாப்பாட்டை பார்த்த அந்த சிட்டுக்குருவி யாரிடமும் சொல்லாமல் போய் சாப்பிட முயன்றது.
அங்கே போகாதே அங்கு ஒரு பூனை இருக்கிறது என்று ஒரு மைனா சொன்னது. அந்த சிட்டுக் குருவி சொன்னது, “என்னோட டெக்நிக்கையே வைத்து என்னையே ஏமாத்தல்லாம் என்று நினைக்காதே என்று சொல்லிவிட்டு போனது” .
அந்த சிட்டுக் குருவி பாவம். அங்கு பூனை இருந்தது. அந்த பூனை இந்த சிட்டுக் குருவியை சாப்பிட வரும்பொழுது, எல்லா பறவைகளும் பார்த்துவிட்டு கத்தின. என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பதரி ஓடி வந்தான் அந்த பய்யன்.
அந்த பய்யனுடைய பூனைதான் அது. ஆனால் அதற்கு முன்னாடி அந்த சிட்டுக் குருவியின் வாலும் காலும் உடைந்தது. அது நினைத்தது, எல்லாரயும் ஏமாத்தனதுக்கு எனக்கு இதுவும் வேனும் என்னுமும் வேனும் என்று புலம்பிக்கொண்டே போனது.
கதை நன்று. கொஞ்சம் எழுத்துப்பிழை இருக்கிறது. கவனிக்கவும். அப்பாவிடம் ஒருமுறை காண்பித்துவிட்டு சரி செய்து போட முயலலாம்.
ReplyDeleteமுயற்சி திருவினையாக்கும் அபி.
ReplyDelete