மூன்று கனவுகள்.
மூன்று கனவுகள்
ஒரு ஊரில் ஒரு அரசன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் நல்லவன். ஒருநாள் அவனுக்கு ஒரு கணவு வந்தது. அந்த கனவில் அவன் படுக்கைக்குமேல் ஒரு நரி தொங்கிக்கொண்டிருந்தது. அவன் அவனுடைய மந்திரிகளிடம் அந்த கனவுக்கு பொருள் என்னவென்று கேட்டான். யாருக்கும் தெரியவில்லை.
அவன் அவனுடைய நாட்டு மக்களில் யாராவது இந்த கனவுக்கு பொருள் கூறினால், அவர்களுக்கு நிரைய பரிசுகள் கிடைக்குமென்று கூறினான். அவன் நாட்டில் இருந்த ஒரு வியாபாரி நான் போய் கூறப்போகிறேன் என்று கூறினான். அவன் வீட்டிலிருந்து வெகு தூர்ம் போய்விட்டான். அப்போது அவன் ஒரு பாம்பை கண்டான்.
அந்தபாம்பு ஒரு பொந்துக்குள்ளே வாழ்ந்து வந்தது. இந்த வியாபாரி இந்த பாம்பிருக்கும் வழியாக சென்றான். அந்த பாம்பு இவனை வழி மறைத்து "எங்கே போறீர்கள்?" என்று கேட்டது. அதற்கு இவன் நடந்ததையெல்லாம் கூறினான். அந்த பாம்பு நான் உனக்கு அந்த கனவின் பொருளை கூறுகிறேன், ஆனால் அதற்கு பதிலாக உனக்கு கிடைக்கின்ற பரிசில் எனக்கு பாதியை தரவேண்டும் என்றது.
இவன் அதற்கு சரி என்று கூறினான். அந்த பாம்பு கூறியது இந்த கனவின் அர்த்தம் என்னவென்றால் உன்னுடைய நாட்டில் நிறைய ஏமாத்துகாரர்கள் இருக்கிரார்கள் என்று கூறியது. இந்த பாம்பு கூறியதை அப்படியே அரசனிடம் போய் கூறினான். அரசன் இவனுக்கு நிறைய பரிசுகள் கொடுத்தான்.
இந்த வியாபாரிக்கு அவனுடைய பரிசிலிருந்து பாதியை அந்த பாம்புக்கு தர விருப்பமில்லை. அதனால் இவன் வேரு வழியாக வீட்டிற்கு சென்றுவிட்டான். இவனுக்காக அங்கு பாம்பு காத்துக்கொண்டிறுந்தது. ஆனால் இவன் வேறுவழியாக வீட்டிற்கு சென்ற விஷயம் தெறிந்ததும் ஏமாற்றத்தோடு பொந்துக்குள் சென்றது.
அடுத்த முறை அந்த அரசனுக்கு வேறொறு கனவு வந்தது. அந்த கனவில் அவன் படுக்கைக்குமேல் ஒரு வாள் தொங்கிக்கொண்டிருந்தது. இதற்கு அர்தம் என்னவென்று அந்த அரசன் அந்த வியாபாரியை மருபடியும் அழைத்தான். அந்த வியபாரி நான் எப்படி சொல்வேன் என்று யோசித்தான்.
சரி நான் மருபடியும் அந்த பாம்பிடமே செல்லப்போகிறேன் என்றுப சென்றான். அந்த பாம்பு அவனிடம் பழைய விஷயங்களை பற்றி எதுவுமே கேட்கவில்லை. இவன் மறுபடியும் அந்த பாம்பிடமே உதவி கேட்டான்.
அந்த பாம்பு மறுபடியும் நான் உனக்கு இந்த கனவிற்கு அர்தம் கூறுகிறேன் ஆனால் எனக்கு நீ அந்த அரசன் தருகின்ற பரிசில் பாதியை தர வேண்டும் என்று கூறியது. அவனும் சரி என்று கூறினான்.அந்த பாம்பு சொல்லியது நம் நாட்டின் மேல் எதிரிகள் போர் எடுக்கப் போகிறார்கள் என்று அர்தம்.
இந்த பாம்பு கூறியதை அப்படியே போய் அந்த அரசனிடம் கூறினான். அந்த அரசன் இவனுக்கு நிறைய பரிசுகள் கொடுத்தான். இவன் அந்த பாம்பு இருக்கும் இடத்திற்கு அப்புரம் அந்த அரசன் தன் படை வீரர்களுடன் போரில் வெற்றி பெற்றான்.
வந்து சேர்ந்தான். அந்த பாம்பு என்னுடைய பரிசைத் தா என்று கூறியது.இவன் அதற்கு நான் உனக்கு கொடுக்கப்போகிற பரிசு என்னவென்றால் ஒரு சந்தனக் கட்டை மட்டும்தான் கொடுக்கப்போகிறேன் என்றான். அந்த பாம்பு இவனைக் கோபமாக கேட்டது.
இவன் அவனுடைய வாளை எடுத்து அந்த பம்பின் வாலை வெட்டிவிட்டு சென்றான். மருபடியும் ஒரு நாள் அந்த அரசனுக்கு என்னொறு கனவு வந்தது. அந்த கனவில் அந்த அரசனின் படுக்கைக்கு மேல் ஒரு ஆடு தொங்கிக்கொண்டிருந்தது.
அதற்கு அர்தம் என்னவென்று அவன் இந்த வியாபாரியிடமே கேட்கச்சொன்னான். அவன் மருபடியும் அந்த பாம்பிடமே போய் உதவி கேட்டான். அண்ட்ஹ பாம்பு நான் உதவி செய்யமாட்டேன் என்று கூறியது.
இவன் எனக்கு கிடைக்கும் பரிசில் பாதியை தருகிறேன் என்றான். சரி என்று அந்த பாம்பு கூறியது இதற்கு அர்தம் இனிமேல் நம் நாட்டில் தீயவர்கள் இல்லை என்று கூறியது. இதை அப்படியே போய் அரசனிடம் கூறினான்.
அந்த அரசன் இவனுக்கு பரிசுகள் கொடுத்தான். இவன் மருபடியும் அந்த பாம்பிறுக்கும் வழியாகவே சென்றான். இவன் அந்த பாம்பிற்கு எல்லா பரிசையும் கொடுத்தான். அந்த பாம்பு கூறியது எனக்கு ஒன்றுமே வேண்டாம்.
ஏனென்றால் முதலில் அந்த அரசனுக்கு ஒரு நரி தொங்கிகொண்டிருந்தது. நீயும் அந்த நரி போலே புத்திசலிதனமாக வேறு வழியில் சென்றாய். இரண்டாவது முறை அந்த அரசனுக்கு மேல் ஒரு வாள் இருந்தது.
அதேபோல் நீயும் அன் வாலை வெட்டினாய். மூன்றாவது முறை அந்த அரசனின் கனவில் ஒரு ஆடு மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல் நீயும் மகிழ்ச்சியாகி எனக்கு எல்லா பரிசையும் கொடுத்தாய்.
இது நீ செய்த தவறு கிடையாது என்று கூறியது. இரண்டு பேறும் வீட்டிற்குச் சென்றார்கள்.
இந்த கதையை நான் வாண்டுமாமா எழுதிய ”பன்னாட்டு பல்சுவை கதைகள்” என்ற புத்தகத்தில் படித்தேன்.
இது நீ செய்த தவறு கிடையாது என்று கூறியது. இரண்டு பேறும் வீட்டிற்குச் சென்றார்கள்.
இந்த கதையை நான் வாண்டுமாமா எழுதிய ”பன்னாட்டு பல்சுவை கதைகள்” என்ற புத்தகத்தில் படித்தேன்.
அபிராம்,
ReplyDeleteகதை மிகவும் நன்றாக உள்ளது. சில எழுத்துப் பிழைகளை சரி செய்யவும். உன் வயதில் வேறு யாரும் இதை செய்கிரார்களா என்று எனக்கு தெரியவில்லை. உன் திறமைக்கு எனது பாராட்டுக்கள்.
தொடர்ந்து எழுதவும். மேலும் தொடர வாழ்துக்கள்.
அன்புடன் ஆனந்த்
அபிராம்,
ReplyDeleteகதை மிகவும் நன்றாக உள்ளது. சில எழுத்துப் பிழைகளை சரி செய்யவும். உன் வயதில் வேறு யாரும் இதை செய்கிரார்களா என்று எனக்கு தெரியவில்லை. உன் திறமைக்கு எனது பாராட்டுக்கள்.
தொடர்ந்து எழுதவும். மேலும் தொடர வாழ்துக்கள்.
அன்புடன் ஆனந்த்