பென்சில் அட்டகாசம்
இது மாணவர்களின் புத்தகம்.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்த புத்தகத்தை எழுதியவர் விழியன்.
இந்த புத்தகத்தை எனக்கு அனுப்பியவர் குமார் மாமா.
இந்த புத்தகத்தில் ஷர்ப்னெர் தான் வில்லன்.
இந்த புத்தகத்தில் எனக்கு பிடிதிருந்த காட்சி அந்த பென்சில்கள்
ஆமையை பார்பதுதான்.

good. but many சந்திப்பிழைகள்.
ReplyDeleteதொந்தி பெருத்த தகப்பனே தள்ளிப்போ
ReplyDeleteசந்திப் பிழையெல்லாம் பாராதே - இந்தவரை
படித்து ரசித்ததைப் பகிரத் தெரிந்தவந்தான்
அடுத்த அறிவாளி ஆம்.
செம!
Delete@அபிராம்,
ReplyDeleteநல்லது செய்தாய்... இப்படியே எழுதிப் பழக நாளை நீயும் எழுத்தை ஆளுவாய். ஏனென்றால் எழுத எழுத எழுத்தே உன்னை தன்னால் ஆட்கொள்ளும்...
@writerpara:
//தொந்தி பெருத்த தகப்பனே தள்ளிப்போ
சந்திப் பிழையெல்லாம் பாராதே - இந்தவரை
படித்து ரசித்ததைப் பகிரத் தெரிந்தவந்தான்
அடுத்த அறிவாளி ஆம்.//
சொன்ன கருத்து சரியென்றாலும், அதை வெண்பாவில் சொன்னதால் அதிலுள்ள தளை தட்டலைச் சொல்ல வேண்டியது அவசியமென்று கருதுகிறேன்.
இந்தவரை படித்து,
ரசித்ததைப் பகிரத்,
தெரிந்தவந்தான் அடுத்த மூன்று இடங்களில் தளை தட்டுகிறது.
மேலும் தெரிந்தவந்தான் என்பது தெரிந்தவன்தான் என வந்திருக்க வேண்டும். இது தங்களை குறை சொல்வதற்காக அல்ல.
@ஹரன்பிரசன்னா ஜி,
வொய், வொய் எல்லா அப்பாவுமே இப்படி ஏன்... ஊக்கப்படுத்துங்க, நிறைய முன்னுக்கு வருவாப்புல அபி...